அழுகிய உருளைகிழங்கு! வண்டுகள் மொய்க்கும் மைதா மாவு! மூக்கை துளைத்த நாற்றம்! அதிர வைத்த திருச்சி பானிபூரி பேக்டரி!

சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரிக்கப்பட்டு வந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவமானது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் தேவதானம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த 20 பேர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, குடோன் அமைத்து பானிபூரி தயாரித்து வந்தனர். இங்கு பணிபுரிபவர்கள் பிற வியாபாரிகளுக்கு விற்பனையும் செய்து வந்தனர்.

இந்த குடோனில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரிக்கப்பட்டு வந்ததாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளன. உடனடியாக சித்ரா என்ற அதிகாரியின் தலைமையில் உணவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடோனில் சோதனை செய்தனர்.

அப்போது அழுகிய நிலையில் உருளைக்கிழங்குகள், மைதாவில் வண்டுகள் ஆகியவற்றை கண்டதால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.