2018ம் ஆண்டின் சிறந்த படங்களை போன வாரம் பார்த்து இருந்தோம். இப்ப மொக்கை படங்களின் பட்டியல்.
2018ம் ஆண்டின் சிறந்த மொக்கை படங்கள்! சர்காருக்கு எத்தனாவது இடம் தெரியுமா?
1. தானா சேர்ந்த கூட்டம். ஏற்கனவே இந்தியில வந்த ஒரு படத்தை அப்படியே ரீமேக் பண்ண கூட தெரியல.
ஸ்பெஷல் 26 அப்டிங்ற படத்தோட ரீ மேக் தான் தானா சேர்ந்த கூட்டம். தேவையில்லாத எந்த அலங்காரமும் இந்திப்படத்தில்
இருக்காது. பெரிய பில்டப் எதுவும் இருக்காது. அதுதான் அந்த படத்தோட அழகே. அதுலயும் க்ளைமாக்ஸ்ல அந்த போலீஸ் கேரக்டர் ரிவீல் ஆகும்போது அடன்னு இருக்கும். ஆனா
தமிழ்ல அடச்சீன்னு இருந்தது. அவ்ளோ ஓட்டை. அதுலயும் க்ளைமாக்ஸ்ல சூர்யா கொடுக்குற ஸ்பீச் எல்லாம் காது
கொடுத்து கேட்க முடியாது. சொடக்கு மேல சொடக்கு போடுது மட்டுந்தான் படத்தோட ஒரே ஆறுதல்.
2. கலகலப்பு 2. சுந்தர்.சி படங்களுக்கு எப்பவுமே நம்பி போகலாம். ஏன்னா மினிமம் ஒரு ரெண்டு சீனாவது சிரிக்க வச்சிருவாரு மனசார. அந்தவகையில் கலகலப்பு முதல் பாகம் யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்ரீட். இப்ப வரைக்கும் பல மீம்-களோட டெம்ப்லேட்டா இருக்குற படம் அது. அதோட ரெண்டாவது பாகம் முதல் பாக அளவுக்கு இல்லாட்டியும் கூட, குறைஞ்சபட்சம் முழுசா பார்க்குற அளவுக்காவது இருக்கணும். அதுதானே நியாயம்? ஆனால் முதல் பாகத்துல ஒரு எளிமை இருந்தது. அது டோட்டலா மிஸ் ஆனது கலகலப்பு
2 பிளாப்புக்கு மிக முக்கிய காரணம். ரெண்டாவது முதல் பாகத்துல இருந்த இன்டரஸ்டிங்கான கேரக்டர் பில்டப் இதுல சுத்தமா கிடையாது.
3. சவரக்கத்தி. ஆனா இப்படி ஒரு படம் பார்த்ததுக்கு மொட்டை ப்ளேடால கழுத்தை அறுத்து செத்து போயிருக்கலாம்ன்னு சொல்றதுதான் இந்த படத்துக்கான சரியான விமர்சனமா இருக்க முடியும். என்ன நினைப்புல இந்த மாதிரியான திரைக்கதையை எல்லாம் எழுதுறாங்கன்னே எனக்கு புரியல. பிளாக் ஹியூமர்ன்னு ஒவ்வொரு சீனுக்கு பக்கத்துலயும் எழுதி வச்சி ஸ்க்ரிப்டை கொடுத்துருப்பாங்க போல. அதை படிச்ச மிஷ்கினும், ராமும்
"ஆமா ஆமா இது பிளாக் ஹியூமர்தான்"னு நம்பி நடிச்சிருப்பாங்க போல. சரி நடிக்கிறப்பவாவது சிரிப்பு வரலையேன்னு புரிஞ்சி நடந்திருக்கலாம்ல? அதுவும் இல்ல. டைரக்டர் கட் சொல்லிட்டு கூடவே சேர்ந்து,"சார் பிளாக் ஹியூமர் செமையா வந்திருக்கு"ன்னு வேற சொல்லியிருப்பாரா இருக்கும்.
4. இருட்டு அறையில் முரட்டு குத்து. போன வருஷம் ஹரஹர மஹாதேவகி சுமாரான படங்கள் லிஸ்ட்ல இருந்தது. அதுக்காக நம்பி அதே டீம் எடுத்த இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் செம டென்சன் ஆயிருப்பாங்க. பலர் பாதி படத்துலயே எந்திரிச்சி வந்துட்டாங்க. ஏன்னா முழு படமும் பார்த்திருந்தா மூச்சு திணறி செத்திருப்பாங்க. எப்படித்தான்டா உங்களுக்கு எல்லாம் மனசாட்சி வருது? இதெல்லாம் ஏ ஜோக்குன்னு வெளியில சொன்னா இப்பலாம் ஸ்கூல் படிக்கிற பையன் கூட சிரிக்க மாட்டாண்டா.. இதை விட நல்லா பேஸ்புக்-ல நிறைய ஏ ஜோக் தினமும் வருது.
5. நடிகையர் திலகம். இருட்டு அறையில் முரட்டு குத்துவை கூட ஒரு வகையில சேர்த்துக்கலாம். ஆனா வரலாறுங்கிற பேர்ல இப்படி அசிங்கம் பண்ணி வைக்கிற படங்களை மட்டும் மன்னிக்கவே கூடாது. என்னதான் செம ஆர்ட் டைரக்ஷன், செம ஹீரோயின்னு இருந்தாலும் கூட, நம்ம கூட ரத்தமும் சதையுமான வாழ்ந்த ஒருத்தரை பத்தி படமெடுக்குறமே அப்படிங்கிற குறைஞ்சபட்ச யோசனை கூட இல்லாத, காசுக்காக, மாசுக்காக எந்த எல்லைக்கும் போகக்கூடிய ஆட்கள் எடுத்த படம் இது. இப்படி ஒரு கேவலமான ட்ரிபியூட் எந்த ஒரு நடிகைக்கும் எவனும் கொடுத்திருக்க மாட்டான்.
6. சாமி ஸ்கொயர். இன்னொரு இரண்டாம் பாக படம். ஹரியோட மோசமான சம்பவங்கள்ல மிக முக்கியமான சம்பவம் இந்தப்படம். ஆக்சுவலா இந்தப்படம் மேல ஏன் இவ்ளோ ஆத்திரம் வருதுன்னா முதல் பாகத்து மேல இருந்த மரியாதையையும் சேர்த்து கெடுத்துட்டானுங்க. அதான் பெரிய காண்டு. விக்ரம்லா ரொம்ப பாவம். அவரு தன்னையும் வருத்திகிட்டு, நம்மளையும் உசுர வாங்கிகிட்டு.. வேணாம் சீயான். வேணவே வேணாம். படத்துல ஒரே ஆறுதல்ன்னு சொல்றதுக்கு கூட எந்த ஆறுதலும் இல்லாம போனதுதான் இதுல பெரிய சோகம். அதுலயும் சூரி காமெடி இருக்கே. கொடுமை
இந்த லிஸ்ட்ல இருக்குற படங்கள் எல்லாம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வியை தழுவிய படங்கள். அதனால வேற மொக்கைப் படங்களுக்கு இந்த லிஸ்ட்ல இடம் கொடுக்கல. ஆனால் சர்கார் ஆவ்ரேஜ் படம்ங்றதால சிறந்த படங்கள்லயும் அதுக்கும் இடம் இல்லை. மொக்கை படங்கள்ளயும் இடம் இல்ல.
நன்றி: பாலகணேசன்