சர்க்கரை கார்டு என்ற கவலையா..? அரிசி கார்டுக்கு மாறிக்கோங்க. எடப்பாடி அரசு தாராளம்.

பொது விநியோகத் திட்டத்தில் தற்பொழுது 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்கள்.


அதன்படி, சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து, இன்று இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்புறமென்ன மக்களுக்கு நல்ல செய்திதான்.