5 ஸ்டார் சாக்லேட்டில் நெளிந்த புழு! பெற்றோர்களே உஷார்..! நாமக்கல் பரபரப்பு சம்பவம்!

ஃபைவ்ஸ்டார் சாக்லேட்டில் புழுக்கள் இந்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஃபைவ்ஸ்டார் சாக்லேட்டில் புழுக்கள் இந்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகே உள்ள பட்டணம் பகுதியில் உள்ள கடையில் குழந்தைகள் சிலர் ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டை வாங்கியுள்ளனர்.

குழந்தைகள் வீட்டிற்கு சென்ற பின்னர் 5 ஸ்டார் சாக்லேட் பாக்கெட்களை பிரித்தபோது சாக்லெட்டில் பல புழுக்கள் நெளிந்துள்ளன. உடனடியாக குழந்தைகளின் பெற்றோர் அந்த கடைக்கு சென்று முறையிட்டுள்ளனர்.

அதற்கு அந்த கடை உரிமையாளர் ராசிபுரம் பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணா ஏஜென்சிஸ் என்ற மொத்த விற்பனையாளரிடமிருந்து  சாக்லெட்டுகளை வாங்கியதாக கூறியுள்ளார். மேலும் அந்த நிறுவனத்தின் மீது உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகாரளிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த சாக்லேட்டில் கடந்த ஜனவரி மாதம் தயாரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 9 மாதங்கள் வரை அந்த சாக்லேட்டை சாப்பிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எக்ஸ்பயரி டேட் முடிவதற்கு உள்ளாகவே சாக்லேட்டில் புழுக்கள் தோன்றியிருப்பது பைவ் ஸ்டார் சாக்லேட் பிரியர்களை அதிர வைத்துள்ளது.