சுடச்சுட பறிமாறப்பட்ட ஆம்லேட்டில் நெளிந்த புழுக்கள்! அதிர்ச்சியில் உறைந்த ரயில் பயணி! டெக்கான் குயின் ரயிலில் விபரீதம்!

புகழ்பெற்ற ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட ஆம்லெட்டில் புழுக்கள் இருந்த சம்பவமானது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவின் புகழ்பெற்ற ரயில்களில் டெக்கான் குயின் ரயிலும் ஒன்று. இந்த ரயிலானது மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையையும் புனேவையும் இணைக்கும். சம்பவத்தன்று சாகர் பலே என்ற பயணி ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் சாப்பிடுவதற்காக ஆம்லெட்டை ஆர்டர் செய்தார்.

ஆம்லெட்டை சாப்பிட போகும்போது அதில் புழுக்கள் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ரயில்வே ஊழியர்களை அழைத்து புகாரளித்தார். அவர்கள் சாகருக்கு வேறொரு உணவை அளித்தனர். 

இந்த சம்பவத்தை அவர் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்தப் புகைப்படங்களை கண்ட பலர் ரயில்வே நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறையின் செய்தி தொடர்பாளரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கவர், "சாகர் அளித்த புகாரில் நிச்சயமாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று பதிலளித்தார். 

இந்த சம்பவமானது ரயிலில் பயணம் செய்த பிற பயணிகளிடமும் கடும் அச்சத்தை ஏற்படுத்தியது.