இந்தியாவில் 10 பெண்களில் 7 பெண்கள் கள்ளக்காதல் செய்கின்றனர்! திடுக்கிட வைக்கும் ஆய்வு முடிவு!

கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்கள் குறித்த உலக அளவிலான ஆய்வு முடிவு ஒன்றில் 10 பேரில் 7 பெண்கள் கணவனை ஏமாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆய்வை மேற்கொண்ட டேட்டிங் செயலி ஒன்று உலக அளவில் 50 லட்சம் பேரிடமும் இந்தியாவில் 5 லட்சம் பேரிடமும் கருத்துக்களைக் கேட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் கணவன் குடும்பப் பொறுப்புகளில் உதவாததாலும் தன்னுடன் மனம் ஒத்து செயல்படாததாலும் வெறுப்புற்ற நிலையில் இருப்பதாக பல பெண்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் குடும்ப வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்துவதும் ஒரு காரணம் என்றும், புதிய உறவு வழக்கமான வாழக்கையில் இருந்து மாறுபட்ட உற்சாகத்தை தருவதால் அதை நாடுவதாகவும் தெரிவித்திருந்தனர்.  இந்த ஆய்வில் மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட மெட்ரோ நகரங்களைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் கணவனை ஏமாற்றுவதும் தெரிய வந்தது.

மேலும் இந்த செயலியின் 30 சதவீத அங்கத்தினர்கல் 34 முதல் 49 வயதான பெண்கள் என்றும் தெரிய வந்தது. 20 சதவீத ஆண்களும் 13 சதவீத பெண்களும் தங்கள் துணையை ஏமாற்றுவத்தை ஒப்புக் கொண்டுள்ள்ளனர். இது தவிர ஓரினச் சேர்க்கையில் ஆர்வமுடைய பலர் வழக்கமான திருமண பந்தத்தில் சிக்கிக்கொள்ளும் நிலையில் அதில் இருந்து விடுபட இந்த செயலியை பயன்படுத்தி புதிய துணையை தேடிக் கொள்வதும் தெரியவந்தது.