ஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு ஒரு வழியாக முடிந்தது கல்யாணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?

உலகளவில் ஒரே பாட்டின் மூலம் புகழடைந்த பிரபல ஆசிரியர் ஏற்கனவே திருமணமானவர் என்ற செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மலையாள திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் மோகன்லால் நடித்த "வெளிபடின்டே புஷ்டகம்" என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்தப்படத்தின் வந்த அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒரே ஒரு பாடல் மட்டும் பட்டிதொட்டியெல்லாம் பரவி உலக அளவில் மிகப்பெரிய ட்ரெண்டிங் ஆனது.

அந்த பாட்டுதான் "ஜிமிக்கி கம்மல்". இந்தப் பாட்டு திரைப்படத்தில் வெளியானவுடன் பல்வேறு தரப்பினரும் இந்த பாட்டுக்கு நடனமாடி சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்து வந்த வண்ணம் இருந்தனர். 

இதே முயற்சியில் கேரளாவை சேர்ந்த கல்லூரி ஆசிரியரான ஷெரில், தன்னுடைய கல்லூரியின் ஒரு விழாவிற்கு நடன ஒத்திகை செய்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோவானது உலகளவில் மிகப்பெரிய ஹிட்டானது. 

இந்த வீடியோவை கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்களில் கண்டுகளித்தனர். அவர்கள் அனைவரும் இந்த வீடியோவில் நடித்த ஷெரிலை சமூக வலைத்தளங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அந்த வீடியோவிற்கு முன்னர் அவர் எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லை.

இந்நிலையில், ஷெரிலின் என்னடா மற்றும் முகபாவனைகளை பார்த்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவரை நடிப்பதற்கு அழைத்தார். ஆனால் ஷெரில் தனக்கு பிடித்தமான ஆசிரியர் தொழிலிலேயே ஈடுபட வேண்டும் என்று நடிப்பு வாய்ப்பையும் மறுத்துவிட்டார்.

தற்போது இவருடைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது போல. தன்னுடைய கணவருடன் உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.