17000 மதிப்புள்ள உலகக் கோப்பை டிக்கெட்டுகள் தற்போது ஒன்றரை லட்சம் வரை விற்கப்படுவதாக பரவி வரும் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்! ஒரு டிக்கெட் விலை ரூ.1 லட்சம்! எந்த போட்டிக்கு தெரியுமா?
உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியை காண்பதற்கான டிக்கெட்டுகள் கோல்ட், சில்வர்,பிரான்ஸ் என்ற அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு லெவலிற்கும் ஒவ்வொரு விதமான விலையை நிர்ணயித்துள்ளனர். இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் ஜூன் மாதம் 30 ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் நகரில் மோத உள்ளனர்.
அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் ஐசிசி அமைப்புடன் உடன்பாட்டில் உள்ள டிக்கெட் மாஸ்டர் நிறுவனம் விலையை நிர்ணயித்து விற்று வருகின்றது. இந்தியா- இங்கிலாந்து இடையேயான ஆட்டத்திற்கு இந்திய மதிப்பின்படி 20,565 ரூபாய் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது இதன் 87,510 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோன்று உலக கோப்பை இறுதி ஆட்டம் அடுத்த மாதம் 15ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற மைதானமான லாட்ஸில் நடக்கவிருக்கிறது. இந்த ஆட்டத்திற்கான பிளாட்டினம் ரக டிக்கெட்டின் விலை 17,000 ரூபாயாக முதலில் இருந்தது. இந்த ரகத்தின் நிலையானது தற்போது 1.5 லட்சம் ரூபாய் வரை எட்டியுள்ளது.
இது அனைத்து ரக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. கோல்டு ரக டிக்கெட்டின் விலை முதலில் எட்டாயிரம் ரூபாயாக இருந்தது ஆனால் தற்போது 1.25 லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இந்த செய்திகளை, கொல்கத்தாவில் அமைந்துள்ள ஐசிசியுடன் உடன்பாட்டில் உள்ள ஃபெனடிக் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம், ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு விடையாக அளித்தது.
மேலும் டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்கப்படுவதில்லை என்பதையும் தெளிவாக தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனமானது உலகளவில் நடக்கக்கூடிய விளையாட்டுகளுக்கு டிக்கெட் விற்கும் பணியினை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.