சம்பளம் தராமல் இழுத்தடிப்பு! அஞ்சப்பர் ஓட்டல் முன் தீக்குளித்த ஊழியர்! பதற வைக்கும் சம்பவம்!!

அஞ்சப்பர் உணவகத்தில் பணியாற்றும் நபர் உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரி மாவட்டத்தில் ஈச்சம்பட்டி பகுதி அமைந்துள்ளது. இங்கு உதயசங்கர் என்பவர் பிறந்து வளர்ந்தார். தற்போது இவர் சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அஞ்சப்பர் உணவகத்தில் ஆர்டர் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். உதயகுமாருக்கு திவ்யா என்ற பெண்ணுடன் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இவருடைய உறவினர் அஜித் என்பவர் உணவகத்தில் பணிக்காக சேர்ந்தார். கடந்த வாரம் அஜித் உணவகத்தில் இருந்த பணத்தை திருடிவிட்டு ஓடிப்போய் விட்டார். மீண்டும் அவர் பணிக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உணவாக மேலாளர்கள் அஜித்துக்கு பதிலாக உதயசங்கரை அந்த பணத்தை கட்ட  வற்புறுத்தியுள்ளனர்‌. 

இதனைக் கண்டு பயந்த உதயசங்கர் மீண்டும் பணிக்கு செல்ல மறுத்துள்ளார். பின்னர் மனைவியை சமாதானப்படுத்தி அவரை பணிக்கு அனுப்பினார். உணவக மேலாளர்கள் மீண்டும் அவரை பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இவர் நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள அஞ்சப்பர் தலைமை இடத்திற்கு சென்றார். அங்கு சென்ற அவர் தனக்கு கடன்தொகை முன்னதாக வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு உணவக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து அவரை திட்டி அனுப்பியுள்ளனர்.

இதனால் மனம் நொந்து போன உதயசங்கர் உணவகத்தின் முன் உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஒருவழியாக இவரை மீட்ட பொதுமக்கள் குறிப்பாக அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்தனர். 

நேற்றிரவு இவரிடமிருந்து மரண வாக்குமூலத்தை பெறுவதற்கு திருமதி.கிரிஜா ராணி என்ற நீதிபதி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார். வாக்குமூலத்தை பதிவு செய்து நீதிபதி அங்கிருந்து வெளியேறினார். 

ஆனால் எதிர்பாராவிதமாக உதயசங்கர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.