முழுவதும் சிதைந்து தூக்கில் சடலமாக தொங்கிய இளம் காதல் ஜோடி! அதிர வைத்த சம்பவம்! பகீர் காரணம்!

காதல் ஜோடியானது உடல் சிதைந்த நிலையில் கிடந்த சம்பவமானது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் திருச்சூரை சேர்ந்த அபிஜித் மோகன் என்ற 25 வயது இளைஞரும், ஸ்ரீ லட்சுமி என்ற 21 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் பெங்களூரில் உள்ள ஒரே மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இருவரும் தனித்தனி விடுதிகளில் தங்கி பணியிடத்திற்கு சென்று வந்தனர். அப்போது இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆதலால் இருவர் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இருப்பினும் நிலைமையை சரியாக்கி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருவரும் காதலித்து வந்தனர்.

ஆனால் ஸ்ரீலட்சுமியின் தாய் மாமா இந்த காதலர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அக்டோபர் மாதம் 9-ஆம் தேதியன்று இருவரும் தங்களுடைய செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். 

உடனடியாக ஸ்ரீலட்சுமியின் பெற்றோர் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தேடியும் காதல் ஜோடியை கண்டுபிடிக்க இயலவில்லை.

இவனுடைய நவம்பர் மாதம் 23ம் தேதியன்று ஸ்ரீலட்சுமி தன்னுடைய தாய்மாமாவுக்கு கால் செய்து "இதுவரை எங்களால் உங்களுக்கு நிறைய தொல்லைகள் இருந்துள்ளன. ஆனால் இனிமேல் அப்படி எதுவும் நடக்காது" என்று கூறிவிட்டு கட் செய்துள்ளனர்.

நவம்பர் 29-ஆம் தேதியன்று கிராமப்புற சாலை ஓரத்தில் இருவரும் உடல் சிதைந்த நிலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்ட நபரொருவர் அப்பகுதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.