வானத்தில் ஒரே நேரத்தில் தோன்றிய 3 சூரியன்கள்! பார்த்து அதிசயித்த மக்கள்! எங்கு தெரியுமா?

ஒரே நேரத்தில் வானில் 3 சூரியன்கள் தோன்றிய சம்பவமானது சீனா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவின் மேற்கு மாகாணங்களில் ஒன்று ஜின்ஜியாங். இந்த மாகாணத்தில் கோர்கோஸ் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த  நகரத்தில் நேற்று வானில் 3 சூரியன்கள் தோன்றியுள்ளன. முதலில் வானில் 2 சூரியன்கள் தோன்றியதை பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர். 

அதன் பிறகு, அடுத்த சில மணி நேரத்திலேயே வானில் 3-வதாக ஒரு சூரியன் தோன்றியதை கண்டு மக்கள் பரவசப்பட்டனர். இது குறித்து அறிவியல் அறிஞர்களிடம் நாம் விசாரித்தபோது, சூரிய ஒளி வானில் ஈரப்பதம் நிறைந்த இடத்தில் ஊடுருவும்போது பனித்துளிகள் இதுபோன்று பிரதிபலிக்கும் என்று கூறினர்.

வழக்கமாக இது பனிப்பொழிவு அதிகமாக உள்ள இடங்களில் நிகழும் என்று கூறிய அறிஞர்கள், பனிப்பொழிவு மிகவும் குறைவாக உள்ள ஜின்ஜியாங் நகரில் ஏற்பட்டிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக கூறியுள்ளனர்.

இதே போன்று சென்ற ஆண்டு ஹெய்லாங்சியாங் மாகாணத்திலும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது சீன மக்கள் 2 காதுகளை கொண்ட சூரியன் என்று சம்பவத்தை வர்ணித்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.