வீட்டில் யாரும் இல்ல வர்றீங்களா? திருமணமான பெண் விடுத்த அழைப்பு..! ஆசையாக சென்ற ஆணுக்கு நேர்ந்த பயங்கரம்!

கள்ளக்காதலனை பெண்ணொருவர் தன்னுடைய முறையான கணவருடன் கொலை செய்துள்ள சம்பவமானது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டம் அமைந்துள்ளது. நீங்க சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் மாதேஸ்வரி. இருவரும் கூலி தொழிலாளிகள். கூலி வேலைக்காக சென்ற மாதம் இருவரும் சென்னையின் புறநகரான அனகாபுத்தூருக்கு வந்துள்ளனர். அங்கு இருவரும் சிவகுமாரின் சகோதரரின் வீட்டில் தங்கியுள்ளனர்.

2 வாரங்களில் மாதேஸ்வரிக்கும் அனகாபுத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் சில முறை உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட வீடியோக்களை உபயோகப்படுத்தி கார்த்திகேயன் மாதேஸ்வரியை மிரட்டி வந்துள்ளார். 

கணவன் மனைவி இருவரும் சித்தூருக்கு சென்ற பின்னரும் மாதேஸ்வரி கார்த்திகேயன் தொடர்ந்து செல்போன் மூலம் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாதேஸ்வரி, குளிக்கும்போது கார்த்திகேயன் நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி வருவதாக கணவரிடம் கூறி அழுது புலம்பியுள்ளார். 

இதற்கு முடிவு கட்ட எண்ணிய சிவகுமார் மாதேஸ்வரயின் மூலம் கார்த்திகேயனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கார்த்திகேயனை சித்தூருக்கு வரவழைத்துள்ளனர். பின்னர் மண்வெட்டியால் கார்த்திகேயனின் தலையில் பலமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

கார்த்திகேயனின் செல்போனுக்கு கடைசியாக வந்த அழைப்புகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது சிவகுமாரும், மாதேஸ்வரியும் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது சித்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.