அய்யய்யோ! பெண்களுக்கு பாதுகாப்பில்லை! தூத்துக்குடியில் கதறிய கனிமொழி! காரணம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதாகவும் இதனை அரசு சரிசெய்யாவிட்டால் ஆபத்தான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தூத்துக்குடி மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி எச்சரித்துள்ளார்.


திருநெல்வேலியில் சில தினங்கள் முன்னர் திராவிட முன்னேற்ற கழகத்தின் மகளிர் ஆணைய உறுப்பினரும் நெல்லை மாவட்டத்தின் முன்னாள் மேயருமான உமா மகேஸ்வரியை மர்ம நபர்கள் கொலை செய்து விட்டனர். அவருடன் அவருடைய கணவரையும் பணிப்பெண்ணையும் சேர்த்து கொலை செய்துள்ளனர். இது சம்பந்தமாக இன்று வரை காவல்துறையினருக்கு ஒரு துப்பும் கிடைக்கவில்லை.

இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க பிரமுகரான கருணாகரன் சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த இரு சம்பவங்களுக்கும் ஆறுதல் தெரிவிக்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி தூத்துக்குடி வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் மசோதாக்களை எங்களின் கருத்துக்களை சரிவர கேட்காமல் பெரும்பான்மை பலத்தை கொண்டு பாரதிய ஜனதா கட்சி நிறைவேற்றி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு பாதகம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழல் பல மாதங்களாக நிலவி வருகிறது. அமைச்சர்கள் இதற்கு தீர்வு காணப்படும் என்று கூறுகிறார்களே தவிர இதுவரை எந்த தீர்வையும் செயல்படுத்தவில்லை. 

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு இந்த ஆட்சியில் குறைந்து கொண்டே வருகிறது. ஆணவக்கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதனை தமிழக அரசு சரி செய்யாவிடில் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறினார். இந்த பேட்டியானது அதிமுக-பாஜகவை மிரட்டும் விதத்தில் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.