பெண்கள் அணிந்து வந்த பர்தாவுக்குள் இவ்வளவு பணமா? மலைத்த புதுக்கோட்டை போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு புறநகர் பேருந்து நிலையத்தில் சந்தேகிக்கும்படி இருந்த இரண்டு பெண்களை அப்பகுதி காவல்துறையினர் கைது செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை புறநகர் பேருந்து நிலையத்தில் சிறிது நாட்களாக மர்ம ஆசாமிகள் நடமாட்டம் இருந்து வருகின்றன. பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் இஸ்லாமியர்கள் போன்று பர்தா அணிந்து கொண்டு தினமும் புறநகர் பேருந்து நிலையத்தை சுற்றி வந்துள்ளனர். அனைவரும் ஒன்றாக திரியாமல் குறிப்பிட்ட நேரத்தில் ஜோடி ஜோடியாக திரிந்துள்ளனர். இத்தகைய நிகழ்வுகளை தினமும் கண்ட பொதுமக்கள் இவர்களின் நடவடிக்கைகளை சந்தேகித்துள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் பொதுமக்களுள் சிலர் அப்பகுதி காவல் நிலையத்தில் இந்த செய்தியினை கூறியுள்ளனர். போலீசார் சில தினங்கள் மறைந்திருந்து இவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதி காவல்துறையினர் இந்த மர்ம கும்பலை பிடிப்பதற்கு ஒரு குழு அமைத்தனர்.

அதன்படி பிடிக்க சென்றபோது பல மர்ம ஆசாமிகள் காவல்துறையினரின் கைகளில் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களை பரிசோதித்த போது அவர்கள் உடையில் கட்டு கட்டாக பணம் வைத்திருந்தனர். மேலும் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவ்விருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கொள்ளையர்கள் என்ற கோணத்தில் போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கி இவ்விருவரின் கூட்டாளிகளையும் மும்முரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது புதுக்கோட்டை புறநகர் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.