நெல்லை லட்சுமி அக்கா வீட்டில் விபச்சாரம்..! ஒரே நேரத்தில் 3 பெண்களுடன் 3 ஆண்கள்..! அதிர்ந்த போலீஸ்!

பெண்களை வற்புறுத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைத்திருந்த மூன்றுபேரை காவல்துறையினர் கைது செய்திருப்பது களக்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


களக்காடு பகுதியில் ஞானசம்பந்தபுரம் என்ற இடம் அமைந்துள்ளது. இப்பகுதி குட்பட்ட ஒரு வீட்டில் கடந்த பல மாதங்களாக விபச்சாரம் நடந்து வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தன. புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் களக்காடு காவல்துறையினர் அந்த வீட்டை சோதனை செய்வது என்று முடிவெடுத்தனர்.

அதன்படி காவல்துறையினர் ரகசியமாக அந்த வீட்டை சோதனை செய்தனர் அப்போது அங்கு விபச்சாரம் நடந்து வந்தது காவல்துறையினர் கண்கூடாக கண்டுள்ளனர். விபச்சாரத்தில் 3 பெண்கள் மற்றும் அவர்களுடன் உல்லாசமாக மேலகுளத்தை சேர்ந்த மணிராஜ், குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டையை சேர்ந்த சேவியர் மற்றும் ராஜசுதர்லின் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

காப்பாற்றப்பட்ட பெண்களிடம் நடத்திய விசாரணையில் கீழவேதநல்லூர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் தங்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்ததாகவும், அதன் பின்னர் தங்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாகவும் கூறியுள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள லட்சுமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது களக்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.