சங்க அறுத்து போட்ருவேன்! மகனை கத்தியை வைத்து மிரட்டிய மாற்றாந் தாய்! வைரல் வீடியோ பெண் சிக்கினாள்! யார் தெரியுமா?

9 வயது சிறுமியை அடித்து மிரட்டிய பெண் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தனது மூத்த தாரத்தின் 9 வயது குழந்தையை ஒரு பெண் அடித்து மிரட்டுவது போல வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த வீடியோ காண்போர் நெஞ்சை பதற வைத்தது.

அந்த வீடியோவில் பயத்துடன் அமர்ந்து கொண்டிருக்கும் 9 வயது சிறுமியை ஒரு பெண் கத்தியை காட்டி மிரட்டி அடித்து துன்புறுத்துவது போல இருந்தது. அந்த வீடியோவில் பேசும் அந்த பெண் உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு என் மகன் மட்டும் தான்.

நீ என் வயிற்றில் பிறக்க வில்லை. உன் அப்பா கூறியதற்காக மட்டுமே நீ எங்கே இருக்கிறாய். அம்மா தம்பி என்று சொந்தம் கொண்டாடி கொண்டால் அறுத்துவிடுவேன் என்று கத்தியை காட்டி அந்த சிறுமியை அந்த பெண் அந்த வீடியோவில் பயமுறுத்தி இருப்பார். 

மேலும் அந்த வீடியோவில் அந்த சிறுமியை அந்தப் பெண் மோசமாக அடித்து துன்புறுத்தி இருப்பார். சமூக வலைத்தளத்தில் வைரலான இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்தப் பெண் யார் என்பதை கண்டுபிடித்து அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை போலீசாருக்கு கூறி வந்தனர். 

இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் பகுதியிலுள்ள அந்த பெண்ணை மலேசியா சிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.