ஆண் குற்றவாளி அழகில் மயங்கிய பெண் போலீஸ் அதிகாரி! இருவரும் சேர்ந்து பிறகு எடுத்த முடிவு!

குற்றவாளியின் அழகில் மயங்கி காவல்துறை அதிகாரி ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தில் ராகுல் தரசனா என்பவர் வசித்து வந்தார். இவர் 2008-ஆம் ஆண்டில் அனில் துஜானா என்ற ரவுடியின் குழுவில் இருந்து குற்றங்களை செய்ய தொடங்கினார். பல்வேறு குற்றங்களை புரிந்ததற்காக அவர் சிறைக்கு சென்ற வண்ணமிருந்தார். கடைசியாக ஆயுதங்கள் கடத்தியதாக 2017-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

உத்திரபிரதேச மாநிலத்தில் பயல் என்ற காவல்துறை கான்ஸ்டபிள் பணியாற்றி வருகிறார். இவர் முதன்முதலில் ராகுலை நீதிமன்றத்தில் சந்தித்துள்ளார். பார்த்தவுடன் முதல் முறையிலேயே அவர் மீது பயலுக்கு காதல் வந்துள்ளது.

சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் மீது கொண்ட நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்துள்ளனர்.

திருமணத்திற்கான இடமும், தேதியும் தெரிவிக்கப்படவில்லை. குற்றவாளியின் மீது காவல்துறை அதிகாரி காதல் கொண்டு திருமணம் செய்து கொண்ட சம்பவமானது உத்திரபிரதேச மாநிலத்தின் காவல்துறை அதிகாரிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.