காக்கி யூனிபார்முடன் ஆண் நண்பர்களுடன் செய்யும் வேலையா இது..! வைரலாகும் வீடியோவின் பரபர பின்னணி!

காவல்துறையினர் சீருடையில் இளம் ஜோடி டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டிக்டாக் வீடியோக்கள் பலரது குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டு வருவது நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். குடும்பங்கள் மட்டுமின்றி பணியிடங்களிலும் டிக்டாக் பல்வேறு உபத்திரவங்களை செய்துவருகிறது. சமீபத்தில் காவல்துறை சீருடை அணிந்த டிக்டாக்கில் நடனமாடி உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்திய பெண்ணின் பெயர் பிரியா. முதலில் காவல்துறை சீருடையில், "பணத்தால் எதையும் வாங்க முடியும்" என்ற பஞ்ச் வசனத்தை பேசியுள்ளார். அதோடு நிற்காமல், காவல்துறையினர் ஒருவருடன் இணைந்து ஆட்டம் பாட்டம் என்று கூத்தடித்த வீடியோக்களும் டிக் டாக்கில் வெளியிடப்பட்டன.

தினசரி காவல்துறையினருக்கு இருக்கும் சிரமங்களும் தேவையற்ற வகையில் இது போன்ற டிக்டாக் வீடியோக்களும் வந்து சேருகின்றன. பொதுமக்கள் மத்தியில் ஏற்கனவே காவல்துறையினருக்கு களங்கம் ஏற்பட்டு வரும் தருவாயில் இதுபோன்ற வீடியோக்கள் அவற்றை இன்னும் அதிகரிப்பது போன்று அமைந்துள்ளன.

ஒருவழியாக காவல்துறையினர் அந்த வீடியோவை ஐடி மூலம் சம்பந்தப்பட்ட பெண்ணை ட்ரெஸ் செய்ததில், அவர் செவிலியராக பணியாற்றி பின்னர் துணை  நடிகையாக வளம் வரும் ஸ்ரீனிகா என்று காவல்துறையினர் கண்டுபிடித்தனர். சினிமா மற்றும் சீரியல்களில் அவ்வப்போது பெண் காவல்துறை அதிகாரியாக நடித்து வரும் இவர் இலைகளுக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற விஷம செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போதும் கூட இவர் நான் செய்த தவறுகளை நினைத்துப் பார்க்காமல், வெளியிட்ட வீடியோக்களுக்கு லைக்குகள் வரவில்லையே என்ற ஏக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.