டெல்லி அருகே ஆற்றில் குதித்து தற்கொலை செய்த பெண்! பெங்களூரில் உயிருடன் வந்த அதிசயம்!

தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை எண்ணிய பெண் ஒருவர் உயிருடன் இருக்கும் சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்தில் காசியாபாத் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கே கோமல் என்பவர் வசித்து வந்தார். இருவருக்கு இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்தது. பணி நிமித்தமாக டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். கோமலின் தந்தை உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாரதிய விவசாய சங்கத்தின் தலைவராவார்.

இந்த மாதம் 6-ஆம் தேதியன்று கோமதி காசியாபாத் மாவட்டத்திற்கு வந்துள்ளார். அங்குள்ள ஹிண்டன் ஆற்றின் கரையோரத்தில் அவருடைய கார் நின்றுகொண்டிருந்தது. கோமலை காரின் சுற்றுவட்டாரத்தில் காணவில்லை. கோமல் காணவில்லை என்று அவருடைய தந்தை அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோமலின் காரை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் காரினுள் தற்கொலை கடிதம் ஒன்று இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதில் கோமல், "என்னுடைய புகுந்த வீட்டை சேர்ந்த நபர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக தற்கொலை முடிவை எடுத்தேன்" என்று எழுதியிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவர் ஹிண்டன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக எண்ணினர். ஆற்றில் தேடியும் கோமலின் உடலை கண்டுபிடிக்க இயலவில்லை. 

இந்நிலையில் கோமலின் செல்போனானது நேற்று ஆப்பரேட் செய்யப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த காவல்துறையினர் திடுக்கிடும் தகவலை கண்டுபிடித்துள்ளனர். அதாவது கோமல் தன் நெருங்கிய தோழிகளுடன் தொடர்பு கொண்டதை கண்டுபிடித்தனர். பின்னர் செல்போன் மூலம் கோமல் ஜெய்ப்பூரில் இருந்ததை கண்டறிந்தனர். 

காசியாபாத் காவல்துறையினர் ஜெய்ப்பூர் சென்ற போது, அவர் மும்பை சென்றுள்ளார். மும்பைக்கு காவல்துறையினர் சென்றபோது அவர் பெங்களூரு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவரை பெங்களூருவிலிருந்து காசியாபாத் அழைத்துவர காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.