விறுவிறுப்பாக நடைபெற்று வந்த திருமண ஏற்பாடு! திடீரென மாயமான மணப்பெண் அலிபாத்திமா! கன்னியாகுமரி திகுதிகு!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென்று மாயமான சம்பவம் தக்கலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைக்கருகே திருவிதாங்கோடு எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட அஞ்சுவண்ணம் என்ற இடத்தில் ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 60. இவரது மகளின் பெயர் அலிபாத்திமா. அலிபாத்திமாவுக்கு இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் 4-ஆம் தேதியன்று அவர் கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார்.

ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. நெடுநேரமாகியும் வரவில்லை என்பதால் ஷாஜஹான் தன்னுடைய உறவினர்களுடன் அலிபாத்திமாவை தேடினார். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து தக்கலை காவல்நிலையத்தில் தன் மகளை காணவில்லை என்று ஷாஜஹான் புகாரளித்தார்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன அலிபாத்திமாவை தேடி வருகின்றனர்.

இதேபோன்ற மற்றொரு சம்பவம் தக்கலையில் நிகழ்ந்துள்ளது.

தக்கலை முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருடைய மகளின் பெயர் ஜெனிதா. ஜெனிதாவின் வயது 29. சில நாட்களுக்கு முன்னர் ஜெனிதாவின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது ஜெனிதாவை காணவில்லை.

இதனால் ஜெனிதாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் ஜெனிதா கிடைக்கவில்லை.பிறகு பிரான்சிஸ் தக்கலை காவல் நிலையத்தில் தன்னுடைய மகளை காணவில்லை என்று புகார் அளித்தார்.புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் மாயமான ஜெனிதாவை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது தக்கலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.