திருமணமான இளம்பெண் மாயம் அடைந்து சம்பவமானது வெள்ளகோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம் செய்த இளம் பெண் மாயம்! 2 குழந்தைகளுடன் தவித்து நிற்கும் கணவன்!

திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில் என்னும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட கே.பி.சி நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய வயது 30. சுரேஷின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியாகும்.
8 ஆண்டுகளுக்கு முன்னர் இவரும் அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு ஓவியா என்ற 7 வயது மகளும், நவநீதகிருஷ்ணன் என்ற 3 வயது மகனும் உள்ளனர்.
சமீப காலத்தில் தமிழ்ச்செல்வி வெள்ளகோவில் முத்தூர் சாலையில் அமைந்துள்ள ஒரு மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார். திடீரென்று சென்ற வாரம் முதல் தமிழ்செல்வி காணவில்லை.
இதனையறிந்த சுரேஷ் பதறி அடித்துக்கொண்டு உறவினர்களுடன் தமிழ்ச்செல்வியை தேடி பார்த்துள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. விரக்தியடைந்த சுரேஷ் தன் மனைவியை காணவில்லை என்று வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தமிழ் செல்வியை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.