ஆவிகளுடன் பேசப் போகிறேன்..! உற்சாகத்துடன் சென்ற பெண் காற்றில் கரைந்து மாயமான விபரீதம்! எங்கு தெரியுமா?

ஆவிகளுடன் பேச சென்ற இளம்பெண் வீடு திரும்பாத சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் நியூஜெர்ஸி என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஸ்டெஃபனி என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் புதன்கிழமை இரவு அன்று ஆவிகளுடன் பேசும் திறமை பெற்ற ஒருவரை சந்திக்க சென்றுள்ளார்.

அதன் பின்னர் ஸ்டெஃபனியிடம்  இருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவருடைய பெற்றோர் கடுமையாக பயந்துள்ளனர். மேலும் ஸ்டெஃபனி கார் நிறுத்தி வைத்திருந்த இடத்திலேயே, கார் இருப்பதால் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மேலும் அவருடைய மொபைல் வீட்டிலேயே இருப்பதாகவும், மொபைல் இல்லாமல் அவர் எங்கும் செல்ல மாட்டார் என்றும் அவருடைய பெற்றோர் கூறியுள்ளனர். காவல்துறையினருக்கு எந்தவித துப்பும் கிடைக்காததால் ஸ்டெஃபனியை கண்டுபிடிப்பதற்கு திணறி வருகின்றனர்.

இந்த சம்பவமானது நியூஜெர்ஸி மாகாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.