ஊட்டச்சத்துக்கு ஹாஸ்பிடர் வந்த கர்ப்பிணி! கருக்கலைப்பு ஊசி போட்டு அனுப்பிய விபரீத டாக்டர்! அதிர்ச்சி சம்பவம்!

ஊட்டச்சத்து ஊசி போட்டுக்கவந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்ட சம்பவமானது தென்கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாதிக்கப்பட்ட பெண் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர். இவர் தற்போது தென் கொரியா நாட்டின் தலைநகரான சியோல் நாட்டில் வசித்து வருகிறார். 6 மாத கர்ப்பிணியாக இருந்த இவர் ஊட்டச்சத்து ஊசி போட்டு கொள்வதற்காக சியோல் நகரிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது மருத்துவமனையை கருக்கலைப்பிற்காக பெண்ணொருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் சரியாக கவனிக்காமல் இவருக்கு மயக்க ஊசி போட்டுள்ளனர். இவரும் தனக்கு ஊட்டச்சத்து ஊசி போடப்பட்டது ஆகவே எண்ணியிருந்தார். 

மயக்க ஊசி போட்ட பிறகு அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதனை அவர் அறிந்திடவில்லை. மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்ற பிறகு அவரது கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் மறுநாள் காலையில் அவர் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்ட உடன் பாதிக்கப்பட்ட பெண் கடுமையாக அதிர்ந்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அவர் காவல்நிலையத்திற்கு சென்று புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டால் மருத்துவரையும், செவிலியர்களின் விசாரித்து வருகின்றனர்.

தென்கொரியாவில் கருக்கலைப்பு என்பது மாபெரும் குற்றம் என்பதால் எந்நேரத்திலும் அவர்கள் சிறையில் அடைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவமானது தென்கொரியா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.