மருத்துவமனையில் கருவை கலைத்த பெண்! ஆனால் ஒரு வாரத்திற்கு பின் வயிற்றில் வளர்ந்த வினோத உயிர்! அதிர வைக்கும் சம்பவம்!

கருக்கலைப்பிற்காக சென்ற பெண்ணுக்கு ஒரு வாரம் கழித்து குழந்தை பிறந்துள்ள சம்பவமானது சீனா நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சீன நாட்டில் ஷாங்ஸி என்னும் மாகானம் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜோ என்பவர் வசித்து வந்தார். இவர் சென்ற மாதம் கருவுற்றிருந்தார். கணவனுடன் கலந்தாலோசித்த பிறகு கருவை கலைக்க முடிவு செய்தார்.

10-ஆம் தேதியன்று இவர் கருவைக் கலைப்பதற்காக அப்பகுதி மருத்துவமனைக்கு சென்றார் மருத்துவர்கள் ஜோவை பரிசோதித்த பிறகு சிகிச்சை மேற்கொண்டனர். கருவை கலைத்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் ஜோ வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்த 1 வாரத்திற்குள்ளேயே ஜோவுக்கு வயிற்றுப் பகுதியில் அசவுகரியங்கள் ஏற்பட்டுள்ளன. வலியை தாங்க இயலாத நிலைக்கு சென்ற உடன் வீட்டு அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜோ தான் கருகலைத்த செய்தியை மருத்துவர்களிடம் கூறியுள்ளார். மருத்துவர்கள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் தெரபி மூலம் வயிற்றுக்குள் குழந்தை இருப்பதை நிரூபித்துள்ளனர்.

அதிர்ந்த ஜோ கருக்கலைப்பிற்காக சென்ற மருத்துவமனையை தொடர்பு கொண்டார். அதிர்ந்த மருத்துவர்கள் அவரை முழுவதுமாக பரிசோதித்தபோது "கருப்பை செப்டம்" என்ற நோயினால் அவர் அவதிப்பட்டு வருவதை கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த நோய் இருப்பதால்தான் மருத்துவர்களால் முதல் முறை கருவை கலைக்க இயலவில்லை என்றும் கூறப்படுகிறது.

மருத்துவ நிர்வாகத்தினர் அவருக்கு மீண்டும் இலவசமாக கருக்கலைப்பு செய்வதாக கூறியுள்ளனர். ஆனால் ஜோ அதற்கு சம்மதம் தெரிவித்ததாக செய்திகள் வெளிவரவில்லை. சீன நாட்டில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள கூடாது என்ற விதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது சீன நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.