ஆடைகளை களைந்த மாமியார்! நிர்வாணமாக காவல் நிலையம் வந்த மருமகள்! அதிர வைக்கும் காரணம்!

நிர்வாண நிலையில் பெண் ஒருவர் நடந்துவந்து போலீசில் புகார் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம், சூரு மாவட்டத்தில் உள்ள பிடாசார் பகுதியை சேர்ந்த ஒரு பெண்தான் இப்படியான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளார். அந்த பெண், சம்பவத்தன்று தனது மாமியார் மற்றும் கொழுந்தியாள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதன்போது, வாக்குவாதம் முற்றி,  மாமியார், கொழுந்தியாள் மற்றும் கொழுந்தனார்கள் அனைவரும் சேர்ந்து, அந்த பெண்ணை சராமரியாக அடித்து, உதைத்துள்ளனர்.

மேலும், அவரின் உடைகளை அவிழ்த்து, நிர்வாணப்படுத்தி, கொடுமை செய்துள்ளனர். இதன்பேரில், அப்பெண், அழுதபடியே, நிர்வாண நிலையில், போலீஸ் நிலையத்திற்கு நடந்தே சென்றுள்ளார். அவருக்கு உதவி செய்யாமல், பொதுமக்கள் பலரும் அவரை மொபைல் போனில் படம் பிடித்து, ரசித்துள்ளனர்.

எனினும், அவர் எதையும் கண்டுகொள்ளாமல், போலீஸ் நிலையம் சென்று, தனது கணவர் ஊரில் இல்லாத நிலையில், புகுந்த வீட்டில் அனைவரும் தன்னை கொடுமை செய்கிறார்கள், என்று புகார் அளித்தார். மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தன்னை, இங்கு அழைத்து வந்து சித்ரவதை செய்கிறார்கள் எனவும் அப்பெண் கூறியிருக்கிறார். 

இதனால், இது ஆட்கடத்தல் சம்பவமாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.