23 ஆண்டுகள் சிறையில் இருக்கும் காதலன்! காத்திருக்கும் இளம் பெண்! நெகிழ வைக்கும் காதல் கதை!

அமெரிக்காவில் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் பீனிக்ஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இங்கு நினா ஹோஃனெப்லெர் என்ற இளம்பெண் வசித்து வந்தார்.  இவர் தன்னுடைய 16 வயதில் மைக்கேல் என்பவரை சந்தித்தார். இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. ஆனால் சந்தித்த சில வாரங்களிலேயே ஆயுதமேந்தி கொள்ளையடித்த  வழக்கில் மைக்கேல் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் கடிதப்போக்குவரத்து மூலமாக இருவரும் தங்களுடைய காதலை வளர்த்து வந்தனர். 2012-ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். 13 ஆண்டுகள் இன்னும் சிறையில் கழிக்க வேண்டிய நிலையில் நினா சமூகத்தை பொருட்படுத்தாமல் மைக்கேலை கரம் பிடிக்க முடிவெடுத்தார்.

2017-ஆம் ஆண்டில் இருவரும் சிறை வளாகத்திலேயே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சிறை வளாகத்திலேயே அவர்கள் 48 மணி நேரத்தை ஒன்றாக செலவழித்து கொள்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கலிபோர்னியா மாகாண சட்டத்தின்படி 15 ஆண்டுகள் சிறையில் கழித்த நபருக்கு 90 நாட்கள் பரோல் அளிக்கப்படும். 90 நாட்களுக்காக இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று நினா தன் வருத்தத்தை தெரிவித்தார். இருப்பினும் தன் கணவர் முழுவதுமாக விடுதலை பெற்று சிறையிலிருந்து வெளிவரும் நாளை எதிர்நோக்கி காத்து கொண்டிருப்பதாக நினா தெரிவித்தார். 

இந்த காதலானது அமெரிக்கா நாட்டிலுள்ள பலரையும் வியக்க வைக்கிறது.