ஷுக்குள் இருந்த பாம்பு பெண்ணைக் அடைத்துள்ள சம்பவமானது கே.கே.நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷூவுக்குள் இருந்த கட்டுவீரியன் பாம்பு! தெரியாமல் கையை விட்ட பெண்! நொடியில் நேர்ந்த சென்னை பயங்கரம்!

சென்னையில் கே.கே.நகர் என்னுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள கன்னிகாபுரத்திலுள்ள 3-வது தெருவில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கார்பென்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சுமித்ரா.
நேற்றிரவு சுமித்ரா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது ஒரு ஷுக்குள் கையை விட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஷுக்குள் இருந்த பாம்பு அவரை கடித்துள்ளது. வலி தாங்க இயலாமல் சுமத்திரா அலறியுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கூறி தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவமானது கே.கே.நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது