நடு ரோடு! ஆடைகள் இல்லை! காரில் உற்சாக பவனி! இளம் பெண் செயலால் அதிர்ச்சியில் உறைந்த சக டிரைவர்கள்! என்ன காரணம் தெரியுமா?

பெண்ணொருவர் காரில் நிர்வாணமாக படுத்து சென்ற சம்பவமானது ஸ்பெயின் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்பெயின் நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் பலேரிக் என்ற தீவு அமைந்துள்ளது. இது அந்நாட்டின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். குழந்தைகள் மற்றும் அனைத்து வயதினரும் இந்த சுற்றுலா தலத்தை பெரிதும் உபயோகப்படுத்துவர். 

இந்நிலையில் பலேரிக் தீவுகளில் பெண் ஒருவர் காரில் நிர்வாணமாக பயணம் செய்த வீடியோவானது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காரின் ஓட்டுநர் புகை பிடித்து கொண்டிருப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இவ்விருவரும் ஃபெராரி காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. காவல்துறையினர் வீடியோவை கண்காணித்து இடம்பெற்றுள்ள நபர்களை தேடி வருகின்றனர். வாகனத்தில் பயணம் செய்தவர்களின் முகம் தெளிவாக தெரிவதால் அவர்களை காவல்துறையினர் எளிதில் கண்டுபிடித்து விடலாம். 

அவ்வாறு கண்டுபிடிக்கும் பட்சத்தில் ஒரு இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக 458 பவுண்டுகளும், பொறுப்பற்ற முறையில் காரை ஓட்டிய குற்றத்திற்காக லைசென்ஸில் 6 புள்ளிகளும் குறைக்கப்படும். சுற்றுலா தலங்களில் இவ்வாறு நடைபெறுவதை மக்கள் கடுமையாக கண்டிக்கின்றனர். இந்த சம்பவமானது ஸ்பெயின் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.