60 நாட்கள் ஒருவன் மாறி இன்னொருவன்! வீடியோ எடுத்து மகளையும் கேட்டனர்! திருமணமான பெண்ணுக்கு பணியாற்றும் இடத்தில் நேர்ந்த பரிதாபம்!

பெண்ணொருவர் 60 நாட்களுக்கு கொடுமைப்படுத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமானது உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் அலிகார் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு நடுத்தர வயது பெண்ணொருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த பணியிடத்தின் உரிமையாளர் இந்த பெண்ணை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனை யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று கூறி அந்த பெண்ணை அவர் மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நிகழ்ந்தவற்றை தன்னுடைய தோழியிடம் கூறியுள்ளார். பலாத்காரம் செய்தவர் தன் தோழியின் நண்பர் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியவில்லை. உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி மற்றொரு ஆண் தோழரிடம் இதுபற்றி கூறியுள்ளார். பலாத்காரம் செய்த உரிமையாளரும், இந்த ஆண் நண்பரும் நெருங்கிய தோழர்களாகவர்.

இதனால் இருவரும் இணைந்து கொண்ட சுமார் 60 நாட்களுக்கு அந்த பெண்ணை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர். அதனை வீடியோவாக எடுத்து அந்த பெண்ணை மிரட்டி வந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் மகளையும் பாலியல் உறவிற்கு வற்புறுத்தியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் துணிச்சல் கொண்ட அந்த பெண் காவல்நிலையத்தில் புகாரளித்தார். தற்போது காவல்துறையினர் வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.