மாதவிடாய் வலி..! தாங்க முடியாமல் ஹாஸ்பிடல் சென்ற பெண்! மருத்துவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த சம்பவம்!

மாதவிடாய் என்று நினைத்து மருத்துவமனைக்கு சென்ற பெண் கர்ப்பமாகியிருந்த சம்பவமானது ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆஸ்திரேலியா நாட்டில்  மெல்போர்ன் நகர் அமைந்துள்ளது. இங்கு கேட்டி மேஸன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 25. இவருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். அதாவது அவருடைய வயிற்றில் 10 செ.மீ நீளத்தில்  குழந்தை இருப்பதாகவும், கர்ப்பமடைந்ததால் வயிற்று வலி ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர். ஜனவரி மாதம் 23-ஆம் தேதியன்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கேட்டி பேட்டியளித்த போது, "நான் கர்ப்பமானதை கேட்டவுடன் பேர் அதிர்ச்சியடைந்தேன். குழந்தையின் தந்தை யார் என்று எனக்கு தெரியும். ஆனால் இப்போதைக்கு என்னால் அதனை கூற இயலாது.

எனக்கு உடலளவில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.  வழக்கமாக அணியும் உடைகளையே அணிந்திருந்தேன். நிறைய பார்ட்டிகளுக்கு சென்றேன். நிறைய மது அருந்தினேன். நிறைய ஆட்டம் பாட்டம் போட்டிருக்கிறேன். ‌ கர்ப்பமானது தெரிந்தபோது  அடுத்த 24 மணிநேரத்தில் எனக்கு குழந்தை பிறந்தது.

பிரசவத்தின் போது குழந்தையின் அசைவுகளை என்னால் ரசிக்க இயலாமல் போனது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காகவே இது நிகழ்ந்ததாக எண்ணுகிறேன். தற்போது எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது"  என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது ஆஸ்திரேலியா நாட்டில் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.