கர்ப்பமாக இருப்பதே தெரியாது! 117 நாட்களில் குழந்தை பெற்றெடுத்த பெண்மணி! நெகிழ வைக்கும் சம்பவம்!

மூளைச்சாவு அடைந்த பெண்மணிக்கு 117 நாட்களுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ள சம்பவமானது செக்குடியரசில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


செக்குடியரசு நாட்டில் பெண்ணொருவர் 15 வாரங்கள் கர்ப்பமாக இருந்த போது மூளைச்சாவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். அவருடைய வயிற்றில் சிசு இருந்ததால் மருத்துவர்கள் அவரை மரணத்தைத் தழுவ விடவில்லை. 

செயற்கை கருவிகளின் மூலம் அவருக்கு தொடர்ந்து உயர்ரக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன. பல்வேறு செயற்கை உபகரணங்களுடன் அவரின் உயிரை மருத்துவர்கள் கட்டிக்காத்து வந்தனர்.

அந்தப்பெண் கர்ப்பிணியாக இருந்ததால் அவருக்கு உதவும் வகையில் செயற்கை எந்திரங்களின் மூலம் நடைபயிற்சி முதலியன அளிக்கப்பட்டன. 117 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த பெண் சில நாட்களுக்கு முன்னர் 2.13 கிலோ எடையுடைய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தைக்கு பிரசவம் பார்த்த பெற்றோர் பெண்ணின் உறவினரிடம் குழந்தையை அளித்தனர்.

பிரசவம் நடை பெறுவதற்காகவே அந்தப் பெண்ணின் உயிரை மருத்துவர்கள் காத்து வந்தனர். பிரசவம் முடிந்த பின்னர் செயற்கை கருவிகளை மருத்துவர்கள் அப்புறப்படுத்தினர். 

இந்த சம்பவமானது செக்குடியரசு நாட்டில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.