பெற்ற குழந்தையை கடத்திச் சென்ற கொடூர தாய்! கண்டுபிடித்த போலீசாரையே அதிர வைத்த காரணம்!

கள்ளக்காதலனுடன் செல்வதற்காக தாயொருவர் பெற்ற குழந்தையை கடத்திய சம்பவமானது உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தில் ஜைனாப் என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய வயது 22. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளார். 

கணவர், மனைவி இவருக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்தன. அப்போது ஜைனாபுக்கு சல்மான் என்ற 25 வயது இளைஞனுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக பழக தொடங்கினார். இறுதியில் இது கள்ளக்காதலாக மாறியது. 

இதனிடையே தன் குழந்தையை கணவரிடமிருந்து பறிப்பதற்காக ஜைனாப் திட்டமிட்டார். வீட்டில் இருந்து தன்னுடைய குழந்தையை தூக்கி சென்று தோழியான கோமலிடம் கொடுத்துள்ளார். மீண்டும் வீட்டிற்கு வந்த ஜைனாப் குழந்தையை காணவில்லையென்று தன் கணவரிடம் கூறியுள்ளார்.

உடனடியாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வீட்டிற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் ஜைனாபிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

ஜைனாபை துருவிதுருவி விசாரித்ததில் அவர் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். உடனடியாக காவல்துறையினர் ஜைனாபை கைது செய்து விசாரித்து வந்தனர். பின்னர் கோமல், சல்மான், கோமலின் மாமியார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.

இந்த சம்பவமானது உத்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .