ஏடிஎம் கார்டை திருடி ஏடிஎம் எந்திரத்தில் பணம் திருட்டு! போலீசை அதிர வைத்த இளம் பெண்!

ஏடிஎம் கார்டை திருடி பெண்ணிடமிருந்து பணம் திருடப்பட்டுள்ளது சம்பவமானது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரியில் மொரடாண்டி பகுதியை சேர்ந்தவர் மீரா. 20-ஆம் தேதியன்று புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரிடமிருந்த பர்ஸை மர்ம நபர்கள் திருடி விட்டனர். அவருடைய பர்ஸில் 4,000 ரூபாய் பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகள் இருந்துள்ளன. 

மீராவின் ஏடிஎம் கார்டிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக அவருடைய மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த மீரா நிகழ்ந்தவற்றை கூறி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

குறுஞ்செய்தியில் இருந்த தகவல்களின் மூலம் காவல்துறையினர் எந்த ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்கப்பட்டதோ அங்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தனர்.

அப்போது பெண்ணொருவர் திருட்டுத்தனமாக படம் எடுப்பதை காவல்துறையினர் கண்டனர். உடனடியாக அந்த பெண்ணின் அடையாளங்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

புதுச்சேரியில் பாரதி நகர் எனும் பகுதியை சேர்ந்த தேன்மொழி என்பவரே ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுத்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பர்சில் எழுதி வைக்கப்பட்டிருந்த ரகசிய எண்ணின் மூலம் பணத்தை எடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

காவல்துறையினர் அவரிடமிருந்து 20,000 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.