பெண்ணொருவர் தன்னுடைய சகோதரியின் கணவரை உருட்டுக்கட்டையால் பலமாக அடித்து தாக்கி இருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எங்கடா கை வைக்குற? அக்காள் புருசனை நடுரோட்டில் சம்பவம் செய்த மச்சினிச்சி! சென்னை பரபரப்பு!

சென்னையில் அமைந்துள்ள புரசைவாக்கத்தில் டவுட்டன் எனும் இடம் அமைந்துள்ளது. டவுட்டன் பாலத்திற்கு அருகே கடந்த 15 வருடங்களாக சிவா மற்றும் இந்து என்னும் தம்பதியினர் வசித்து வந்தனர். இதனிடையே சிவாவுக்கு அதீத குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து இந்துவை துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதேபோன்று சென்ற மாதம் 28-ஆம் தேதியன்று சிவா மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்துவை சிவா கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அறிந்த இந்துவின் சகோதரியான சங்கீதா உருட்டுக்கட்டையால் சிவாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதுபோன்ற சிவா அடி வாங்குவது வழக்கம்தான் என்று அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.
இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.