ஓடும் பேருந்தில் புர்கா அணிந்து கொண்டு 3 பெண்கள் செய்த தகாத செயல்!

சென்னை புறநகர் பகுதிகளில் சங்கிலி பறிப்பு, செயின் பறிப்பு முதலியவை சிறிது காலம் முன்பு விமர்சியாக நடைபெற்றன. பின்னர் காவல்துறையினரின் தீவிர முயற்சியால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது செயின் பறிப்பு நூதன முறையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.


பர்தா அணிந்து கொண்டு பெண்கள் செயின் பறித்து வரும் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.இதேபோன்று தாம்பரம் அருகே பேருந்து ஓடிக்கொண்டிருந்த போதே சசிகலா என்ற பயணியிடம் செயின் பறிக்க 3 பெண்கள் முயன்றுள்ளனர். 

சென்னை நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த சசிகலா என்பவர். இவர் நேற்றிரவு தாம்பரத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதூருக்கு செல்வதற்காக  பேருந்தில் பயணம் செய்துள்ளார். பஸ்சில் நெரிசல் மிகுதியாக இருந்திருக்கிறது.  இதனை உபயோகப்படுத்தி கொள்ளும் வகையில், சசிகலாவை சூழ்ந்து நின்று பயணித்த பர்தா அணிந்த 3 பெண்கள், அவரின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். 

இதை கவனித்த சசிகலா கூச்சலிடவே, சக பயணிகள் அந்த 3 பெண்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது கன்னியாகுமரியை சேர்ந்த பிரியா, சங்கரம்மாள், அபிராமி ஆகியோர் கூட்டம் அதிகமுள்ள பேருந்துகளில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்ததுள்ளது.

இவர்கள் பர்தா அணிந்து கொண்டு தங்கள் அடையாளத்தை மறைப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களை சிறையில் அடைத்த போலீசார், அவர்களிடமிருந்த 2 சவரன் தங்க சங்கிலியும் பறிமுதல் செய்தனர்.