தனிமையில் இருந்த மருமகளுடன் கட்டாய செக்ஸ்! மாமனார் அரங்கேற்றிய கொடூரம்! பிறகு நேர்ந்த விபரீதம்!

கிருஷ்ணகிரியில் மாமனார் ஒருவர் தன் மருமகளை கதவடைத்து கற்பழித்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரியில் உள்ள அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கண்ணன் என்பவர். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கல்யாணம் நடந்த சில காலத்திலிருந்தே சந்தியாவின் மாமனாருக்கு அவர் மீது கண்ணிருந்து கொண்டு இருந்தது.

அடிக்கடி செக்ஸ் சில்மிஷங்களும், தகாத செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த செயலைப் பற்றி தன் மாமியாரிடம் தெரிவித்தார். அதற்கு இதெல்லாம் சகஜம் என்று மழுப்பலாக கூறியுள்ளார். மனமுடைந்த சந்தியா, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரை காவல்துறையினர் அலட்சியப்படுத்தியதாக தெரிகிறது.

2 நாட்களுக்கு முன்பு தன் வீட்டின் கதவை அடைத்து சந்தியாவை அவருடைய மாமனார் கற்பழித்துள்ளார். இதுபற்றி பஞ்சாயத்தில் சந்தியா புகாரளித்தார். ஆனால். இதற்கும் எந்த பயனும் இல்லை. மனம் வெம்பி போன சந்தியா தன் தாயாரின் வீட்டிற்கு சென்று இதைப்பற்றி தெரிவித்தார்.

ஆனாலும் அந்த அசிங்கத்தை சகித்துக்கொள்ள இயலாமல் அவர் விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்டார். அருகிலிருந்த மருத்துவமனைக்கு சந்தியாவை அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனை தொடர்ந்து சந்தியாவின் பெற்றோர் சந்தியாவின் கணவர், மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.