ராஜா மாமா நீ நல்லா இருக்கனும்..! கள்ளக் காதலனுக்கு கடிதம் எழுதிவிட்டு இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!

கள்ளக்காதலனுடன் வசித்து வந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் கோவில்பதாகை எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இத்தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தையும் உள்ளனர்.

இவர்களுடைய பக்கத்துவீட்டு ராஜா என்பவர் வசித்து வந்தார். அவருடைய மனைவியின் பெயர் யமுனா. இத்தம்பதியினருக்கு 1 ஆண் குழந்தையுள்ளது.

இரு குடும்பத்தினரும் அருகே வசித்து வந்ததால் ராஜாவுக்கும் பொன்மனிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர். 

இதனிடையே இவர்களுடைய கள்ள காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இதனால் பயந்த கள்ளக்காதல் ஜோடி ஆனது சில நாட்கள் முன்னர் வீட்டை விட்டு வெளியேறியது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டியில் வாடகை வீடொன்றில் தங்கி வந்தனர். 

ராஜா லாரி ஓட்டுநராகவும், பொன்மணி பெட்ரோல் பங்க் கூடியதாகவும் பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்னர் ராஜாவுக்கு தன்னுடைய மூத்த மனைவியின் மகனை பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றியுள்ளது. உடனடியாக அவர் இதனை பொன்மணியிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன. 

பின்னர் ராஜா சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றார். அப்போது பொன்மணி தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பொன்மணியை மீட்டு சத்தியமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பொன்மணி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் வசித்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பொன்மணி எழுதி வைத்திருந்த கடிதத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

அந்த கடிதத்தில், "ராஜா மாமா நீ நல்லா இருக்கணும். எனக்குதான் யாரை நம்புவது என்று தெரியல" என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவமானது ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.