சாலையில் நடந்து சென்ற பெண் பத்திரிகையாளர்! திடீரென பைக்கில் வந்த 2 பேர்! நொடிப் பொழுதில் நேர்ந்த விபரீதம்!

ஊடகவியலாளர் ஒருவரின் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவமானது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிழக்கு டெல்லியில் ஊக்ளா எனும் இடம் அமைந்துள்ளது. டெல்லியில் பிரபல தனியார் ஊடகத்தில் ராதிகா என்ற பெண் பணியாற்றி வருகிறார். இவருடைய வீடு கோவிந்தபுரி என்ற இடத்தில் அமைந்துள்ளது. 23-ஆம் தேதியன்று இவர் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இவரது கையிலிருந்த செல்போனை பிடுங்கி சென்றுள்ளனர்.

இதேபோன்று மற்றொரு ஊடகவியலாளரான ஜாய்மாலா என்பவர் 23-ஆம் தேதியன்று மாலையில் சித்தரஞ்சன் பூங்கா அருகிலே ஆட்டோ ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இவரை ஆட்டோ ரிக்ஷாவிலிருந்து பிடித்து இழுத்துள்ளனர். இழுத்த வேகத்தில் தாறுமாறாக கீழே விழுந்தார். அப்போது அவர் கையிலிருந்த செல்போனை பிடுங்கி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் காட்சிகள் பதிவாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். குற்றவாளிகளின் முகங்கள் கேமராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளதால் மிக விரைவில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சம்பவமானது கிழக்கு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.