காதலன் செய்த தகாத செயல்! 2 முறை கர்ப்பமான காதலி! பிறகு இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

தன்னை தன் காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தின் முன் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை மாநகரில் பம்மல் என்னும் பகுதி உள்ளது. இங்கு அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டான்ஸ் மாஸ்டர். இவரும் பூந்தமல்லி பகுதியை சேர்ந்த லத்திபா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். காதலிக்கும் போது இருவரும் உல்லாசத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் லத்திபா கர்ப்பமுற்றுள்ளார்.

அப்போது திருமணம் செய்து கொள்ளுமாறு லத்திபா கூற அரவிந்த் கருவை கலைத்துவிட்டு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த லத்திபா அரவிந்த் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். மேலும் உங்கள் மகனை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று லத்திபா கேட்டுள்ளார்.

அப்போது அங்கு இருந்த அரவிந்த் கோபத்தில் லத்திபாவை தாக்கியுள்ளார். இதனால் லத்திபா கரு கலைந்துள்ளது. பிறகு காதலர்கள் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்வது என்று முடிவெடுத்து பிரிந்துள்ளனர். ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் அரவிந்த் லத்திபாவை தொடர்பு கொண்டு காதல் மொழி பேசியுள்ளார்.

இதனால் மனம் உருகிய லத்திபா மீண்டும் தன் உடலை காதலனுக்கு விருந்தாக்கியுள்ளார். மேலும் மற்றொரு முறையும் லத்திபா கர்ப்பமாகியுள்ளார். இந்த முறையும் திருமணம் செய்ய முடியாது என்று அரவிந்த் மறுத்துள்ளார். இதனால் பம்மல் காவல் நிலையத்தில் லத்திபா புகார் அளித்தார். ஆனால் அரவிந்த் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதனால் திடீரென்று பம்மல் காவல் நிலையத்தின் முன்பு லத்திபா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அரவிந்ததை தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அந்த பெண் கூறியுள்ளார். ஆனால் அரவிந்த் தலைமறைவாகிவிட்டார். இதனால் வேறு வழியின்றி போராட்டத்தை முடித்துவிட்டு லத்திபா வீட்டிற்கு சென்றுள்ளார்.

காதல் என்ற பெயரில் உடல் தேவையை பூர்த்தி செய்து கொண்டால் லத்திபாவுக்கு ஏற்பட்ட நிலை தான் ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அனைவரும் என்கின்றனர் போலீசார்.