கணவனை இழந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்! மகளுடன் போலீஸ் ஸ்டேசன் வாசலில் அமர்ந்த கொடுமை!

மகளுடன் தாய் காவல் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமானது துடியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் கவுண்டன்பாளையம் என்னும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள பாபா நகர் என்னும் இடத்தில் சண்முகவடிவு எனும் பெண் வசித்து வருகிறார். இவருடைய வயது 30. அவருடைய கணவரின் பெயர் சுனில்குமார். சில மாதங்களுக்கு முன்னால் சுனில்குமார் இறந்துவிட்டார்.

இத்தம்பதியினருக்கு ஜெயதுர்கா என்ற 4 வயது மதிக்கத்தக்க மகள் உள்ளார்.  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சண்முகவடிவு வீட்டருகே கடை வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையே நேற்று மாலை சண்முகவடிவின் வீடு மற்றும் கடைக்கு முன் மர்ம நபர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் மேலும் சண்முகவடிவேல் கடையை அடித்து உதைத்து நாசம் செய்துள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகவடிவு, துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் காவல்துறையினர் வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி செய்தனர்.

ஆனாலும் காவல்துறையினரை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சண்முகம் வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து துடியலூர் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "சண்முகவடிவு ஏற்கனவே அவருடைய உறவினர்கள் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார். குடும்ப சொத்தின் காரணமாக இவர்களுக்கு இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

இதனால் இந்த சண்டைகளை நீதிமன்றத்தின் மூலமாக தீர்த்துக் கொள்ளுமாறு நாங்கள் ஏற்கனவே சண்முகவடிவிடம் அறிவுரை கூறி விட்டோம். ஆனால் அவர் அதைப் பற்றி யோசிக்காமல் இங்கேயே நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று வற்புறுத்துகிறார்" என்று கூறினார். இந்த சம்பவத்தினால் துடியலூர் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.