மூஞ்சி மேலே ஆக்டோபஸ்சு வைத்து வித்தை காட்டிய பெண்! நினைத்து கூட பார்க்க முடியாத பாதிப்பை சந்தித்த பரிதாபம்!

அமெரிக்கா நாட்டில் ஆக்டோபஸ் உயிரினமொன்று பெண் ஒருவரின் முகத்தை கடித்து குதறியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அமெரிக்கா நாட்டில் வாஷிங்டன் என்னும் நகர் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் ஜேமீ. அமெரிக்கா நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற மீன்பிடி போட்டியில் ஜேமி கண்டுகொண்டார். ஜேமி, டக்கோமோ நேரோஸ் என்ற பாலத்தின் அருகே மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த ஒருவர் தன் வலையில் ஆக்டோபஸை பிடித்தார்.

ஜேமிக்கு ஆக்டோபஸுடன் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. இதனை அவர் அந்த ஆணிடம் தெரிவித்தார். உடனே அவர் ஆக்டோபஸை ஜேமியிடம் அளித்துள்ளார். முதலில் கொஞ்சி விளையாடி கொண்டிருந்த ஆக்டோபஸ் பின்னர் ஜேமியின் முகத்தை கடித்து குதறியது. ஆக்டோபஸ் கடித்து குதறியதால் ஜேமியின் முகம் மற்றும் தொண்டைப் பகுதி வீங்கி போனது.

உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வரும் ஜேமி தன்னை போன்று வேறு எவரும் ஆக்டோபஸ் உடன் விலையாட நினைக்க வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார். இந்த சம்பவமானது வாஷிங்டன் நகரில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.