மார்பகத்தில் திடீர் வலி! அப்படியே வழிந்த ரத்தம்..! துப்பாக்கி குண்டில் இருந்து பெண்ணை காப்பாற்றிய செயற்கை மார்பகம்!

பெண்ணொருவர் செயற்கை மார்பகம் பொருத்தியிருந்ததால் துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பித்த சம்பவமானது கனடாவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


கனடா நாட்டில் டொரன்டோ மாநகரம் அமைந்துள்ளது. இங்கு வசித்து வந்த 30 வயதான இளம்பெண் ஒருவர் 2018-ஆம் ஆண்டில் காலையில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது அங்கு இரு குழுவினரிடையே கடுமையான சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்தது. 

அவர்களுக்குள் துப்பாக்கி சூடு சம்பவமும் அரங்கேறியது. அங்கிருந்து சம்பந்தப்பட்ட பெண் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது மார்பகத்தில் வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதாவது அங்கு நடைபெற்ற துப்பாக்கி சூட்டின் போது எதிர்பாராதவிதமாக ஒரு குண்டு இவருடைய இடது மார்பகத்தில் பாய்ந்துள்ளது. ஆனால் செயற்கை மார்பகம் பொருத்திக் இருந்ததால் அந்த துப்பாக்கி குண்டினால் ஊடுருவ இயலவில்லை. உடனடியாக இடது மார்பகத்தில் குண்டு பாய்ந்துள்ளது. 

அதனால் அவருடைய மார்பகத்தில் வலி ஏற்பட்டு ரத்தம் கசிந்துள்ளது. ஒருவழியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து அவரை பிழைக்க வைத்தனர். செயற்கை மார்பகத்தை பொருத்தாமல் இருந்திருந்தால் அவருடைய உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கூடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த செய்தியானது தற்போது அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.