சாக்குமூட்டைக்குள் மீட்டர் வட்டி அல்போன்சா சடலம்! 2 பெண்கள் சேர்ந்து அரங்கேற்றிய பயங்கரம்! அதிர வைக்கும் காரணம்!

கந்துவட்டி தகராறில் பெண் ஒருவரை 2 பெண்களை கொடூரமாக கொலை செய்திருக்கும் சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் உள்ள ஐஸ்ஹவுஸ் பகுதியில் வசித்து வருபவர் இருதயராஜ். ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் இருதயராஜ் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் அல்போன்சா மேரி. மேரி இட்லி கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

15-ஆம் தேதி காலையில் கடற்கரைக்கு சென்று மீன் வாங்கி வருவதாக மேரி இருதயராஜிடம் கூறி சென்றுள்ளார். நெடுநேரம் ஆகியும் அல்போன்சா மேரி வீடு திரும்பவில்லை. மாலை நேரம் வரை இருதயராஜ் காத்திருந்து பார்த்தார் ஆனால் எந்தப்பயனும் இல்லை. இறுதியில் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் மேரியை தேடி வந்தனர். இதற்கிடையே மதுராந்தகம் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பாழடைந்த வீட்டில் ஒரு சாக்குப்பை உள்ளதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசி வருவதாகவும் கிராம மக்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினரின் உதவியுடன் சாக்குப் பையை திறந்து பார்த்த காவல்துறையினர் பெண்ணொருவர் இறந்து சடலமாக கிடப்பதை உறுதி செய்தனர்.

ஐஸ்அவுஸ் காவல் துறையினர் விரைந்து சென்றனர். இறந்து கிடந்த பெண் காணாமல் போன அல்போன்சா மேரி என்பதை உறுதி செய்தனர். ஐஸ்அவுஸ் காவல் துறையினர் உன்ன விசாரணையை துரிதப்படுத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது அல்போன்சா மேரி வட்டி வியாபாரம் செய்து வந்துள்ளார். அவரிடம் வள்ளி (20,000) மற்றும் மணிகண்டன் (60,000) ரூபாய் கடன்  வாங்கியுள்ளனர். பலமுறை வட்டி கேட்டு இருவரும் தரவில்லை. 

வீட்டிற்கு அடிக்கடி வந்து மேரி பணம் கேட்டதால் வள்ளி மற்றும் மணிகண்டன் ஆத்திரம் அடைந்தனர். மேலும் மேறியை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். அதன்படி பணத்தை திரும்ப தருவதாக கூறி மேரியை வள்ளி வீட்டிற்கு அழைத்தார். வள்ளி மற்றும் மணிகண்டன் ஒரே ஃபிளாட்டில் வசித்து வருகின்றனர்.

மேரி அவர்களின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது மணிகண்டன் இரும்பு கம்பியால் மேரியை தாக்கியுள்ளார். மணிகண்டனின் மனைவியும், வள்ளியும் மேரியின் கைகால்களை பிடித்தனர். மணிகண்டன் தலையணையை வைத்து மேரியின் முகத்தை அழுத்தி கொலை செய்துள்ளனர். 

பின்னர் இன்னொருவர் காய்கறியுடன் மேரியை சாக்குப்பையில் கட்டி ஆட்டோவில் ஏற்றி நெடுஞ்சாலையின் ஓரத்தில் போட்டு சென்றுள்ளனர். காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.