விடுதியிலிருந்து பெண்னொருவர் மாயமான சம்பவமானது காரைக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசுக்கே டிமிக்கி! விடுதியில் இருந்து மாயமான டிக்டாக் வினிதா! பரிதாப நிலையில் கணவன்!
வினிதா என்ற பெண் தேவகோட்டை பகுதியில் வசித்து வருகிறார். இவர் டிக்டாக் செயலியில் மூழ்கியவர். இதனிடையே திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அபி என்ற பெண்ணின் தொடர்பு டிக்டாக் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது. இவருக்கு கரூர் மாவட்டத்தில் சரண்யா என்ற தோழியுமுள்ளார்.
வினிதா சரண்யாவின் மூலம் 20 சவரன் நகைகளை அபியிடம் கொடுத்துள்ளார். தேவகோட்டை காவல்துறையினர் சரன்யா மற்றும் அபியை காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் தேவகோட்டைக்கு வரவில்லை. உடனடியாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்வதற்காக தனிப்படையினர் திருவாரூர் மற்றும் கரூருக்கு சென்றனர்.
இந்நிலையில் வினிதா அவருடைய கணவர் மற்றும் பெற்றோருடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவரை காவல்துறையினர் காரைக்குடி மாவட்டத்திலுள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்க வைத்தனர்.
நேற்று மாலையில் விடுதியில் இருந்து திடீரென்று மாயமானார். உடனடியாக விடுதி நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வினிதாவை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவமானது காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.