நானும் உனது மகளும்..! அந்தரங்க புகைப்படங்களை வருங்கால மாமியாருக்கு அனுப்பி இளைஞன் செய்த செயல்! காதலி வெளிநாடு சென்றதால் அரங்கேறிய சம்பவம்!

காதலி வேறொருவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததால் அவரின் ஆபாசப்படங்களை காதலர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவமானது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஒசரவிளை என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சகிதா என்ற 45 வயது பெண் வசித்து வருகிறார். இவருடைய கணவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவருடைய மூத்த மகளின் பெயர் ஷர்மிளா. ஷர்மிளாவின் வயது 26. குவைத் நாட்டிலுள்ள மருத்துவமனையில் ஷர்மிளா செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

ஷர்மிளா குவைத் நாட்டிற்கு செல்வதற்கு முன்னர் தினேஷ் என்ற இளைஞரை காதலித்துள்ளார். இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர். அப்போது இருவரும் புகைப்படங்களை எடுத்து கொண்டனர். ஃபேஸ்புக் மூலம் மலர்ந்த காதல் இது என்று கூறப்படுகிறது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த  நிலையில்தான் ஷர்மிளாவுக்கு குவைத் நாட்டில் செவிலியர் வேலை கிடைத்தது. தினேஷ் அடிக்கடி ஷர்மிளாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி பணம் தரவில்லை என்றால் தனிமையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஆபாச புகைப்படங்களாக சித்தரித்து வெளியிடுவதாகவும் ஷர்மிளாவை மிரட்டியுள்ளார்.

ஆனால் ஷர்மிளா இவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் சர்மிளாவின் தாயாருக்கு காதல் ஜோடியின் ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார். புகைப்படங்களை பார்த்து ஆத்திரமடைந்த சகிதா, அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்தார். 

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தியவுடன், தினேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காவல்துறையினர் பின்னர் தினேஷிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் "ஷர்மிளா வேறொருவரை திருமணம் செய்து கொள்வதாக கேள்விப்பட்டதால் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு ஷர்மிளா மற்றும் அவரது தாயாரை மிரட்டினேன்" என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.