எனக்கு எல்லாமுமாக இருந்தவர்..! உயிரிழந்த கணவன் சடலத்துடன் விமானத்தில் வந்த பெண்மணி! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

தன்னுடைய கணவரின் சடலத்துடன் துபாயிலிருந்து விமானத்தில் மனைவி தமிழ்நாடு வந்துள்ள சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஐக்கிய அரபு அமீரகத்தில் ராஸ் அல் கைம்மா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தர கட்டுப்பாட்டு துறையின் மூத்த அதிகாரியாக குமார் என்ற 35 வயது தமிழ்நாட்டை சேர்ந்தவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இவருடைய மனைவியின் பெயர் கொல்லம்மாள்.

2 வருடங்களுக்கு முன்னர்தான் தன் மனைவியை துபாய்க்கு அழைத்து சென்றுள்ளார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், ஏப்ரல் 13-ஆம் தேதி அவர்களுடைய வாழ்வை புரட்டிப்போட்டது. வழக்கம்போல குமார் காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு தன்னுடைய பணிக்கு சென்றுள்ளார். சென்று ஒரு மணி நேரத்துக்குள்ளேயே நிறுவனத்தின் காவலாளி ஓடிவந்து கொல்லமாளிடம் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

பதறியடித்துக்கொண்டு கொல்லம்மாள் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் கணவரை பார்ப்பதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அடுத்த சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது கொல்லம்மாளின் வாழ்க்கையில் பெருந்துயரை ஏற்படுத்தியது.

கணவரின் பிரிவு குறித்து அவர் கூறுகையில், "எனக்கு அவர் எல்லாமுமாக இருந்தார். அவருடைய உடலை மீட்டு சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்காகவே நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். என்னை எங்கும் தனியாக அவர் விட்டு சென்றதில்லை. ஆனால் தற்போது ஒரேடியாக என்னை விட்டு சென்றுவிட்டார்" என்று அழுது புலம்பியுள்ளார்.

துபாய் நகரில் சிக்கிக்கொண்ட 182 தமிழர்களை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து வர இந்திய அரசாங்கம் ஒரு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்தது. அவ்வகையில் அங்கு வேலை இழந்தவர்கள், சுற்றுலாவுக்கு சென்றவர்கள் ஆகியோர் தாயகம் திரும்ப விண்ணப்பித்தனர். 200 தொழிலாளிகள், 37 கர்ப்பிணிகள் மற்றும் 43 மருத்துவ சிகிச்சைக்காக வருவோர் ஆகியோரை சேர்த்து கொல்லம்மாள் தன்னுடைய கணவரின் உடலுடன் வந்துள்ளார்.

இந்த செய்தியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.