தவறான சிகிச்சையால் இளம் பெண்ணின் 2 மார்பகங்கள் அகற்றப்பட்டதாகவும் தலைமுடி கொட்டி போனதாகவும் வெளியான தகவல் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை பெற்ற பெண்ணுக்கு தவறான சிகிச்சை! 2 மார்பகங்கள் அகற்றம்! பால் கொடுக்க முடியாத துயரம்!

இங்கிலாந்து நாட்டிலுள்ள ஸ்டெஃப்பார்ட்ஷைர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் சாரா பாயில். சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு குழந்தை பிறந்தது. திடீரென்று குழந்தை இவரின் தாய்பாலை குடிக்க மறுத்ததால் மிகவும் கவலை கொண்டார். பின்னர் ராயல் ஸ்டோக் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (Royal stoke university hospital) பரிசோதனைக்காக சென்றார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். கடுமையான கீமோதெரபிக்கு உள்ளாக்கபட்டுள்ளார். இதனால் இவருக்கு தலைமுடி மிகவும் கொட்டியுள்ளது. மேலும் புற்றுநோய் பரவுவதாக மருத்துவர்கள் சுதாரித்துள்ளனர்.
மேலும் மார்பகங்களை அகற்றினால் தான் உயிர் பிழைக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியதால் அவர் மார்பகங்களை அகற்றிக்கொண்டார். சில மாதங்கள் கழித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது, திசுக்களை பரிசோதிக்கும் முறையான ஹிஸ்டோபேதாலாஜிஸ்ட் (histopathologist) மருத்துவர்கள் புற்றுநோய் இருப்பதாக தவறாக கூறியுள்ளனர்.
இதனை அறிந்த சாரா மருத்துவமனை மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்குக்கு ஒத்துழைப்பு தருவதாக மருத்துவ நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். தற்போது செயற்கை மார்பகங்களை பொருத்தியுள்ளனர்.
2-வது குழந்தை பிறந்துள்ள நிலையில் தாய்ப்பால் கொடுக்க இயலாமல் சாரா வருந்தி வருகிறார். இந்த சம்பவமானது பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.