சூட்கேஸ் நிறைய தங்கம், வைரம், கட்டுகட்டாக பணம்! நெகிழச் செய்த ஆட்டோ ஓட்டுனரின் நேர்மை! கண்கள் கலங்கிய பெண்!

ஆட்டோவில் தவறுதலாக விடப்பட்டு சென்ற சூட்கேஸை ஓட்டுநர் நேர்மையாக ஒப்படைத்த சம்பவமானது அனைவரையும் நெகிழ செய்துள்ளது.


சென்னையில் தலைமை செயலக காலனி என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு பத்மநாபன் என்ற ஆட்டோ ஓட்டுநர் வசித்து வருகிறார். 8-ஆம் தேதியன்று ஒரு பெண் மின்ட் பகுதியிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இவருடைய ஆட்டோவில் பயணித்தார். அப்போது அந்த பெண் தன் சூட்கேஸை மறந்து ஆட்டோவில் வைத்துவிட்டு சென்றார்.

பத்மநாபனும் உடனடியாக இதனை கவனிக்கவில்லை. சில மணிநேரங்கள் கழித்து இதனை கவனித்த பத்மநாபன் சூட்கேஸினுள் என்ன இருக்கிறது என்பதை ஆராயாமல் அப்பகுதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அந்தப் பெண் ராஜஸ்தான் சென்ற பிறகு தன்னுடைய சூட்கேஸை பறிகொடுத்தது பற்றி உறவினர்களிடம் கூறியுள்ளார். உறவினர்களும் யானைகவுனி பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்‌. 

காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ராஜேஸ்வரி அந்த சூட்கேஸை சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்களிடம் கொடுத்தார். அந்த சூட்கேஸில் விலையுயர்ந்த வைர நகைகள், தங்க நகைகள், கை கடிகாரங்கள், பணம் முதலியன இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன்னுடைய ஆட்டோவில் விட்டுச்சென்ற சூட்கேஸை பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநரின் நேர்மையை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.