கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சொந்த மகளையே கழுத்தை நெரித்து தாய் ஒருவர் கொலை செய்திருக்கும் சம்பவமானது நாகர்கோவில் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பாவின் நண்பருடன் உல்லாசமாக இருந்த தாய்! நேரில் பார்த்த மகள்! பிறகு அரங்கேறிய நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம். அங்குள்ள நெடுமங்காடு கருப்பூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் மஞ்சு. இவருடைய வயது 34. இவர் சில வருடங்களுக்கு முன்பு தன் கணவனை இழந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவர் பெயர் மீரா. இவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, தற்போது நெடுமங்காடில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் மஞ்சுவின் கணவர் இறந்தபிறகு மஞ்சுவின் வீட்டிற்கு அவருடைய நண்பரான அனீஸ் என்பவர் அடிக்கடி வந்து போக தொடங்கினார். மஞ்சுவிற்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தார். அடிக்கடி சென்று வந்ததால் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கமானது பின்னர் கள்ளக்காதலாக மாறியது. மீரா பள்ளிக்கு சென்ற நேரங்களில் இருவரும் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
ஒரு நாள் இருவரும் உல்லாசமாக இருப்பதை மகள் மீரா பார்த்துள்ளார். மேலும் மீரா அதன் பிறகு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மீரா பள்ளிக்கு செல்லாத நேரங்களில் தங்களால் உல்லாசம் அனுபவிக்க இயலாது என்று எண்ணி இருவரும் எரிச்சலடைந்தனர். இருவர், மீராவை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி கடந்த 10-ஆம் தேதி மீராவின் கழுத்தை நெரித்து இருவரும் கொன்றுள்ளனர்.
மீராவின் உடலை 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாழும் கிணற்றில் வீசி விட்டனர். மஞ்சு தன் தாயாரான வத்ஸலாவிடம் சென்று, மீரா ஓர் இளைஞனுடன் ஓடிபோய் விட்டதாகவும், தமிழகம் சென்று அவரை மீட்டு வரப் போவதாகவும் கூறியுள்ளார். கடந்த 12ம் தேதி கேரளாவில் இருந்து மஞ்சு அணீசுடன் தமிழகத்திற்கு வந்துள்ளார். நாகர்கோவிலில் வாடகை வீட்டில் இருவரும் வசித்து வந்தனர்.
பல நாட்கள் ஆகியும் மஞ்சு தன் தாயிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அதேபோன்று அணீசும் தலைமறைவானதால் தாயார் வத்ஸலா சந்தேகப்பட்டு நெடுமங்காடு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். நெடுமங்காடு காவல்துறையினர் வலைவீசி தேடியதில், இருவரும் நாகர்கோவிலில் வீடெடுத்து தங்கி உள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் இருவரையும் கைது செய்து விசாரித்ததில், அவர்கள் மீராவை கொன்று கிணற்றில் வீசிய குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளனர்.
அந்த பாழும் கிணற்றில் பகுதிக்கு காவல்துறையினர் இருவரையும் அழைத்து சென்று அழுகிய நிலையில் கிடந்த மீராவின் உடலை வெளியே எடுத்தனர். பின்னர் மஞ்சு, அணீஷ் இருவரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.