மொட்டை மாடியில் குப்புற கிடந்த பிணம்! சுடுகாட்டில் நிர்வாண பூஜை! சாமியாருடன் சேர்ந்த கணவனை பலி கொடுத்த மனைவி! காரைக்குடி திகுதிகு!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாந்திரீக முறையில் மனைவி கணவனை கொலை செய்த சம்பவமானது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது இதற்கருகேயுள்ள பெரியார் 4-வது வீதியில் மணிமுத்து என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் பூமதி. இத்தம்பதியினருக்கு பிரவீனா என்ற மகளும், கமலக்கண்ணன் அரவிந்த் என்ற மகன்களும் உள்ளனர்.

நேற்று அதிகாலையில் மணிமுத்து அவருடைய வீட்டு மொட்டை மாடியில் சடலமாக கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரிக்க தொடங்கினர். ஆனால் மழை வெளுத்து வாங்கியது அவர்களால் எளிதாக சேகரிக்க இயலவில்லை. 

இதனிடையே காவல்துறை அதிகாரிகளுக்கு பூமதியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கணவன் இறந்து கிடக்க அவருடைய அழுகை செயற்கையாக இருந்தது. மேலும், மணிமுத்து தன் சகோதரி குடும்பத்தின் மீது வழக்கை திசை திருப்புவதற்காக முயற்சித்து வந்திருந்தார். காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து துருவி துருவி விசாரணை நடத்தினர். 

விசாரணையை தாங்க இயலாத பூமதி, ராமேஸ்வரம் சாமியார் வேல்முருகன், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் மற்றும் குமார் ஆகியோருடன் இணைந்து தன் கணவனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு முன்னர் ராமேஸ்வரத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற சாமியார் சிவகங்கைக்கு வந்து புதையல் எடுத்து தருவதாக கூறிக்கொண்டு இருந்தார்‌. அப்போதுதான் அவருக்கும், பூமதிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மணிமுத்துவிற்கு நிரந்திரமாக வெளிநாட்டில் வேலை கிடைத்தது இவர்களுக்கு சாதகமாக போனது.

எப்போதாவது வீடு திரும்பும் மணிமுத்துவிற்கு, இவர்களுடைய கள்ளக்காதல் குறித்து தெரியவில்லை. 5 வருடங்களுக்குப் பிறகு மணிமுத்து சென்ற வாரம் காரைக்குடிக்கு வந்தபோது அரசல் புரசலாக இது குறித்த செய்திகள் தெரிய வந்தன. 

இதனால் பயந்துபோன பூமதி, சாமியாரின் உதவியுடன் தன் கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி வேல்முருகன் தன்னுடைய கூட்டாளிகளான பிரகாஷ் மற்றும் குமாரை அழைத்து கொண்டு நள்ளிரவில் மணிமுத்துவின் வீட்டிற்கு சென்றுள்ளார். மொட்டை மாடியில் தனியாக உறங்கிக்கொண்டிருந்த மணிமுத்துவை கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்காக அவர்கள் பயன்படுத்திய காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவமானது காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.